
யூடிபர் மீது மனைவி புகார்
பணம் கேட்டு மிரட்டுகிறார்! யூடியூபர் சுதர்சன் மீது அவரது மனைவி தேனி மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார்!
பிரபல யூடியூபர் சுதர்சன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சுதர்சன் மீது வரதட்சணை புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு பெண் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்த நிலையில் தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தொடக்கத்தில் ‘டெக் பாஸ்’ என்ற யூடியூப் சேனலில் பணிபுரிந்து வந்த சுதர்சன், பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ‘டெக் சூப்பர் ஸ்டார்’ என்ற தனி சேனலை தொடங்கினார்.
வீடு கட்டுவதற்கு கூடுதலாக பணம் பணம் வேண்டும் என்று தனது கர்ப்பிணி மனைவியை அடித்து விரட்டியதாக சுதர்சன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமணத்தின் போது 30 சவரன் நகை, ரூ.5 லட்சம் பணம் மற்றும் இதர சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக சுதர்சன் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
வரதட்சணையாக ரூ. 5 லட்சம் பெண் வீட்டார் தரப்பில் கொடுக்க தயாராக இருந்த நிலையில், ரூ. 10 லட்சம் வேண்டும் என்று தனது மனைவியை மிரட்டியுள்ளார்.
பணம் தர மறுத்த நிலையில் தனது மனைவியை மிரட்டி உள்ளார். தற்போது அவரது காதல் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் சுதர்சன், அவரது தாய் மாலதி, தந்தை சுந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.