
தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலை துறையின் இணை ஆணையர் மற்றும் திருக்கோவில் உயர் அதிகாரிகள் குற்றாலநாத திருக்கோவிலுக்கு வந்திருந்தனர் 8 மணி அளவில் திருக்குற்றலாநாதர் திருக்கோவில் அமைச்சர் ஆய்வுப்பணி மேற்கொண்டார் முதலில் நேரடியாக சிவபெருமானை தரிசனம் செய்தார் பின்பு குழல்வாய்மொழி அம்பாளை தரிசனம் செய்து பராசக்தி பீடம் அருகே வந்து பிரார்த்தனை செய்துவிட்டு தெற்கு வாசல் வழியாக தீ எரிந்த மதில் சுவரை ஆய்வு செய்து விட்டு நேரடியாக அருவிக்கரையை சென்று மீண்டும் கோவில் வாசலுக்கு வந்தடைந்தார் கோவில் வாசல் அருகே வந்து திருக்கோவில் செயல் அலுவலர் அழைத்து சுகாதாரமற்ற முறையில் திருக்கோயில் வளாகம் இருக்கிறது அருவிக்கரை விநாயகர் தெற்கு வாசல் பகுதி புதர் மண்டி செடிகளாக இருக்கிறது சாக்கடை நீர் வருகிறது திருக்கோயில் வருமான என்ன என்று அமைச்சர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் நின்று கொண்டிருந்தார் கோவில் வருட ஏலம் எவ்வளவு செல்கிறது… தீ எரிந்த பகுதியில் கடைகள் எத்தனை இருந்தது.. ஏன் வருடத்திற்கு இரண்டு முறை ஏலம் விடுதிர்கள் பசலி என்ற முறையில் வருடத்திற்கு ஒருமுறை தானே ஏலம் விட வேண்டும் கோவில் வெளிப்புறம் எல்லாம் சுத்தமல்ல… அறங்காவலர் குழு தலைவர் அவர்களிடம் உங்களெல்லாம் இதை கண்காணிப்பதற்கு தான் பதவி உங்களுக்கு தரப்பட்டுள்ளது இது போன்ற விஷயங்களை நீங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்… அமைச்சர் கேட்ட கேள்விகளுக்கு திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் பதில் தெரியாமல் முன்னாள் ஊழியர்களை அந்த இடத்தில் கூப்பிட்டது பலர் மத்தியில் பேசும் பொருளாக இருந்தது… ஒரு செயல் அலுவலர் திருக்கோவிலுக்கு புதியதாக வந்தவுடன் குற்றாலநாதர் கோவிலுக்கு எத்தனை கடைகள் உள்ளது.. இந்த கடைகள் மூலமாக வசூல் எவ்வளவு…? தற்காலிக கடைகள் எத்தனை ஏலம் விடப்பட்டுள்ளது..? நிரந்தர கடைகள் எத்தனை உள்ளது…
கார் பார்க்கிங் எவ்வளவு ஏலம் சென்றது… திருக்கோயில் உண்டியல் வருமானம் என்ன?
சொத்து எவ்வளவு உள்ளது? ஆண்டு வருமானம் எவ்வளவு? என்று பல்வேறு கேள்விகள் அமைச்சர் கேட்டதற்கு பதில் தெரியாமல் செயலிழந்த செயல் அலுவலர்…. இவரால் ஜாயிண்ட் கமிஷனர் அன்புமணிக்கு தான் கெட்ட பெயர்… அதுமட்டுமல்ல பராசக்தி கல்லூரியில் அதிரடியாக ஆய்வு பணி மேற்கொண்டார் அலுவலகம் பலமுறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்
செயல் அலுவலர் அவர்கள் 24 மணி நேரமும் அரசு காரில் தான் குற்றாலக் கோவில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையே கம்மி.. ஆனால் இவர் செல்லும் பொழுது எக்ஸ்ட்ரா இரண்டு பேரோடு பயணிக்கிறார்… கோவில் பணி எவ்வளவு இருக்கிறது இவரை நம்பி இவ்வளவு பொறுப்புகளை ஒப்படைத்திருக்கக்கூடிய அமைச்சர் அவர்கள் இவரால் அறநிலை துறைக்கு தான் அவபேர் ஏற்படுகிறது.. அறங்காவலர்கள் குழு தலைவர்களையும் உறுப்பினர்களையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார் இந்த செயல் அலுவலர்.. இவர் இப்படியே இருந்தால் திருக்கோவில் வளர்ச்சி அடையாது வீழ்ச்சி பாதைக்கு தான் செல்லும் ஆகவே மாண்புமிகு தமிழக முதல்வனார் பாராட்டப்பட்ட அமைச்சர்களின் செயல் பாபு என்கின்ற சேகர்பாபு வா அமைச்சர் அவர்கள் துறையில் இவர் போன்ற அலுவலர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் வாய்ப்புள்ளது இதற்கு முன்னால் இருந்த செயல் அலுவலர் கண்ணதாசன் செய்த ஊழல் என்ன? தற்போது எவ்வளவு வருவாய் உள்ளது முறையாக அமைச்சர் நேரடியில் தணிக்கையாளர்களை வைத்து தணிக்கை செய்தால் பல்வேறு உண்மைகள் வெளியில் வரும்…