
ஓட்டப்பிடாரம் பிடிஓ சித்தார்த்தன் ஓய்வு பெறுவதால் 10 பவுனில் தங்க சங்கலி வழங்கி வழியனுப்ப ஊராட்சி நிதியில் மோசடி.!
– லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் அகிலாண்டபுரம், அக்காநாயக்கன்பட்டி, ஆரைக்குளம், ஆதனூர், சந்திரகிரி, துரைசாமிபுரம், கவர்னகிரி, இளவேலங்கால், ஜெகவீரபாண்டியாபுரம், ஜம்புலிங்கபுரம், கைலாசபுரம், கலப்பைபட்டி, காட்டுநாயக்கன்பட்டி, கீழ அரசடி, கீழக்கோட்டை, கீழமுடிமன், கொடியன்குளம், கொல்லம்பரம்பு, கொத்தாளி, குலசேகரநல்லூர், குமரெட்டியாபுரம், குறுக்குச்சாலை, குதிரைக்குளம், மலைப்பட்டி, மணியாச்சி, மருதன்வாழ்வு, மேல அரசடி, மீனாட்சிபுரம், மேலபாண்டியாபுரம், முள்ளுர், முறம்பன், நாகம்பட்டி, ஒணமாக்குளம், ஒட்டநத்தம், ஓட்டப்பிடாரம், பாஞ்சாலங்குறிச்சி, பாறைக்குட்டம், பரிவல்லிக்கோட்டை, பசுவந்தனை, பட்டினமருதூர், புதூர் பாண்டியாபுரம், புதியம்புத்தூர், ராஜாவின் கோவில், சங்கம்பட்டி, சண்முகபுரம், சில்லாநத்தம், சில்லாங்குளம், தளவாய்புரம், தருவைகுளம், தென்னம்பட்டி, தெற்கு கல்மேடு, வீரபாண்டியபுரம், வாலசமுத்திரம், வேடநத்தம், வெள்ளாரம், வேப்பலோடை, எப்போதும் வென்றான், கீழமங்கலம், சாமிநத்தம், வள்ளிநாயகிபுரம் ஆகிய ஊராட்சிகள் உள்ளன.
தமிழகத்தில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 05.01.2025 அன்று முடிவடைந்ததை தொடர்ந்து,ஊராட்சிகளின் கண்காணிப்பிற்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையி்ல தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள 61 ஊராட்சிமன்றங்களின் பணிகள் அனைத்தும் செயலர், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக இருப்பவர் சித்தார்த்தன். இவரின் அரசு பணிகால நிறைவானது வரும் 30.07.2025 அன்றுடன் முடிவடைகிறது.
இத்தகைய சூழலில் பணிநிறைவடையும் பிடிஓ சித்தார்த்தன் அவர்களுக்கு பணிநிறைவு நாளன்று அனைத்து ஊராட்சிகளின் சார்பில் 10 பவுன் தங்க சங்கலி வழங்கி வழியனுப்பிட திட்டமிடப்பட்டு அந்தந்த பகுதி மண்டல வட்டார வளர்ச்சி அலுவலலர்கள் தலைமையில் ஊராட்சிகளிலிருந்து ₹ 50,000 வசூலிக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட ₹50,000 ஆனாது எவ்வித பணிகளிலும் மேற்கொள்ளாமல் போலியாக பில் வழங்கப்பட்டு பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய பணமோசடியில் ₹10,000 ஊராட்சி செயலர்களும், ₹10,000 யை மண்டல பிடிஓக்கள் எடுத்துக் கொண்டு மீதம் ₹30,000 பணத்தை ஒவ்வொரு ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் பெயரில் வழங்க வேண்டுமென இத்தகைய அரசு நிதியின் பணமோசடி விதிமீறல்களில் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அரசு ஒப்பந்ததாரான பஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த மாடசாமி என்ற பெரிய மோகனும் உடந்தையாக இருந்து அனைத்து ஊராட்சிமன்ற அலுவலர்களை மிரட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பணி நிறைவு பெறும் ஓட்டப்பிடாரம் பிடிஓ சித்தார்த்தனுக்கு 10 பவுனில் தங்க சங்கிலி வழங்கிட ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிமன்றங்களில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
