ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அயிரவன்பட்டி முருகேசனின் பினாமி (பங்கு) நிறுவனமான Amazo solar farm LLP நிறுவனத்தில் மர்மமான முறையில் வாலிபர் மரணம்.!
– தூத்துக்குடியில் பரபரப்பு.!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குஜராத் தலைமையிடமாக உள்ள Amazo solar farm LLP நிறுவனமானது இயங்கி வருகின்றன. இந்த solar நிறுவனத்தின் முக்கிய (பங்குதாரராக) செயல்பாட்டுதாராக இருந்து வருபவர்கள் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் ஆகியோர் இருந்து வருவதோடு, இந்நிறுவனத்தின் அனைத்து பணிகளின் ஒப்பந்ததாராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையி்ல் ஓட்டப்பிடாரத்தில் இயங்கி வரும் Amazo solar farm நிறுவனத்தில் நேற்றைய தினம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் (வயது 42) என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இத்தகைய மர்ம மரணத்தை மறைக்கும் நோக்குடன் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அவருடைய சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன் தலைமையில் மூடிமறைக்கும் விதமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
தகவலறிந்த பெற்றொர் மற்றும் உறவினர்கள் விரைந்துள்ளதாகவும், இறந்தவரின் பிரேத உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
