சீன வர்த்தக இணையத்தில் ஐபோன் 9 விற்பனை பட்டியலிடப்பட்டுள்ளது.
சீனாவில் ஜிங்க்டாங் என்ற இணையதளத்தில் JD.com ஐபோன் 9 விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. மே 1-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை ஐபோன் விற்கப்படும் என்று அந்தத் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடல் பற்றிய மற்ற விவரங்களோ, புகைப்படமோ இதில் இடம் பெறவில்லை. மாறாக ஒரு துணியால் மொபைல் மூடப்பட்டது போன்ற புகைப்படமே இடம்பெற்றுள்ளது.
ஏப்ரம் 22-ம் தேதி ஐபோன் 9 மற்றும் SE 2 ஆகிய மாடல்கள் விற்பனைக்கு வருவதாக இருந்தது. அதற்கு முன் ஏப்ரல் 15 அன்று எப்போதும் போல அறிமுக நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த நிகழ்ச்சி ரத்தானது.
2016-ம் ஆண்டு வெளியான SE மாடலைப் போல SE 2 மாடலும் விலை குறைந்த ஐபோனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, ஐபோன் 9-ல், 4.7 இன்ச் அகல திரையும், ஏ13 பயோனிக் சிப்ஸட்டும் இருக்கும் என்றும் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். 64 ஜிபி மற்றும் 128 ஜிபி வடிவங்களில் இது கிடைக்கும் என்று தெரிகிறது.