திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய மனித கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று
30.7. 2020 காலை 10:30 மணி அளவில் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் நடைபெற்றது.
மேற்படி கருத்தரங்கில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர்
திரு எம். எஸ்.முத்துசாமி., இ.கா.ப., அவர்களும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா,
இ.கா.ப., அவர்களும் மற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் நிறுவன ஆலோசகர் முனைவர் பாலமுருகன் மற்றும் அலோசியஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு காவல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளைச்சாமி வரவேற்றார்.
கருத்தரங்கில் பேசிய மாவட்ட எஸ்.பி. காணாமல் போன குழந்தைகள் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட புகார்களில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குழந்தைகள் பாதுகாப்புடன் வாழும் சூழ்நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும், குழந்தைகள் கடத்தல் தொடர்பான குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது *குண்டர் தடுப்புச் சட்டம்* பாயும் எனவும் டிஐஜி எச்சரித்தார்.
காணாமல் போன 2 குழந்தைகளை உடனடியாக மீட்ட செம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணகுமார் அவர்களை டிஐஜி பாராட்டினார்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி முருகேஸ்வரி நன்றியுரை கூறினார்.