
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மேக்கரை பகுதிஇந்த பகுதியில் அன்பு இல்லம் என்ற ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் உள்ளதுஇதனை கிருத்துவ மத போதகர் ராஜேக்ஷ் என்பவர் தனிமனிதராக நடத்திவருகிறார் இங்கு சுமார் இறுநூற்றுக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்இவர்களுக்கான உணவு உடை மற்றும் மருத்துவ வசதிகளை சில சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் செய்து வருகின்றனர்இந்நிலையில் நேற்று இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான பக்ரித் தினத்தை வல்லம் மதினா நகர் மஸ்ஜித்துல் தக்வா பள்ளிவாசல் ஜமாத்தினர் சிறப்பாக கொண்டாடினர்ஜமாத்தின் தலைவரும் இஸ்லாமிய பாடகர் மறைந்த நாகூர்ஹனீபாவின் மருமகனுமான ஜனாப் பஷீர் தலைமையில் ஹாஜி ரியாஸ் மற்றும் ஜனாப் சம்சுதீன் ஆகியோர்இன்று அன்பு இல்லத்திற்க்கு சென்று சுமார் இறுநூறு பேருக்கு தேவையான இறைச்சிகளை அன்பு இல்லத்தின் தாளாளர் ராஜேஷிடம் வழங்குனர்மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்கிற நல்லென்னத்தில் செய்கின்ற உதவிகளை மதபோதகர் ராஜேஷ் மற்றும் அன்பு இல்ல ஊழியர்கள் பாராட்டினர்


