நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் மக்கள் பெரிதும் அவஸ்தையில் உள்ளனர் தினமும் அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதே மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர் இதனை பயன்படுத்தி சில சமூக விரோத கும்பல்கள் மக்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதிகளில் சிலர் வங்கியில் கடன் வாங்கி தருவதாகவும் அதற்க்கான வழிமுறை கட்டணமாக 250 ரூபாயை தமது வங்கி கணக்கில் செலுத்தவேண்டும் எனவும் கூறியுள்ளனர் இதனை நம்பி அப்பகுதியிலுள்ள 500 க்கும் மேற்பட்டவர்கள் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர் அதன்பிறகு அந்த மோசடி கும்பல்களின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்தது இதனால் தாம் ஏமாற்ற பட்டு விட்டோம் என்பதை உணர்ந்து போலீசாரிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர் மக்களிடத்தில் தற்போது பணபுழக்கம் இல்லாத நிலையிலும் பொதுமக்களை குறிவைத்து மோசடிகும்பல்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தருவதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது
விசில் செய்திகளுக்காக வீரமணி