வேளாங்கண்ணி காவல் நிலைய ஆய்வாளரின் வற்புறுத்தல் காரணமாக , கொரோனா டெஸ்ட் கொடுத்து, வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த பெண் காவலர், காவல் பணிக்கு வந்ததால் மற்ற சக காவலர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாய நிலை, காவலர்கள் பீதி. அந்தப் பெண் காவலருக்கு கோரோனோ தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.*
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிபவர் சங்கீதா. இவருக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட அந்த பெண் காவலருக்கு கொரோனா டெஸ்டும் எடுக்கப்பட்டு மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்பட்டு இருக்கவேண்டுமென்று மருத்துவரின் ஆலோசனைப்படி அந்தப் பெண் காவலர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் வேளாங்கண்ணி காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கியராஜ் தன்னுடைய அதிகாரத்தினால் , அந்தப் பெண் காவலரை கட்டாயப்படுத்தி உடனே பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டு அந்தப்பெண் காவலருக்கு டியூட்டிஎ போட்டு அனுப்பியுள்ளார். கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காவலர் சங்கீதா கொரோனா டெஸ்டுக்கு கொடுத்து இருந்தும் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பணி செய்துள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த காவல் நிலையத்தில் பெண் காவலருடன் பணிபுரிந்த சக காவலர்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்த வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஏற்கனவே காவலர் ஒருவருக்கு கொரானா பாதிக்கப்பட்டதால் வேளாங்கண்ணி காவல் நிலைய பகுதிகள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு கடந்த வாரம்தான் திறந்துவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் காவலரை பழிவாங்குவதாக நினைத்து, சக காவலர்களையும் வேளாங்கண்ணி காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கியராஜ் புலம்ப வைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகிறது.