திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிளை சிறையில் பல்வேறு வழக்ககளில் கைது செய்யப்பட்டு 42 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் சிறை காவலர் உட்பட 21கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போலிசார் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.