கரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் திருப்பதி மலையில் துவங்கிய சிறுத்தை, கரடி, மலைப்பாம்பு, மான் வனவிலங்குகள் நடமாட்டம் தற்போதும் தொடர்கிறது.
ஊரடங்கு நடைமுறையை தொடர்ந்து கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் 80 நாட்கள் திருப்பதி மலையில் பக்தர்களுக்கான சாமி தரிசனம் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன்பின் ஏழுமலையானை வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே அப்போது முதல் தினமும் சுமார் 8000 முதல் 9000 வரையிலான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
ஊரடங்கு நடைமுறை முழுமையாக அமலில் இருந்தபோது திருப்பதி மலையில் அவ்வப்போது சிறுத்தை, கரடி, மலைப்பாம்பு,மான் ஆகிய வனவிலங்குகள் நடமாட்டம் காணப்பட்டது.
ஊரடங்கு நடைமுறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக தற்போது திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகின்றனர்.
இந்த நிலையிலும் திருப்பதி மலையில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்கிறது.
நேற்றிரவு திருப்பதி மலையில் உள்ள வெளிவட்ட சாலையில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வந்த கரடி ஒன்றைப் பார்த்த விஜிலன்ஸ் துறையினர் அதனை காட்டுக்குள் விரட்டி விட்டனர்.
திருப்பதி செய்தியாளர் ஈஸ்வர் மற்றும் புஷ்பராஜ்