2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் துணை இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேட்டி அளித்துள்ளார். மேலும் மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் நாட்டை பிளவுபடுத்தும் திமுக தேசவிரோத கட்சிதான் எனவும் அவர் சாடியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய அளவிலான பாஜக கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கலந்துகொண்டு நிர்வாகிகள் மத்தியில் கலந்துரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை அகற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே இலக்கு என்றும், அதன் அடிப்படையில் தான் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா திமுகவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் கூறினர். தொடர்ந்து பேசிய அவர் இரு மொழிக் கொள்கை தான் வேண்டும் என்று பேசும் எந்த கட்சியாக இருந்தாலும் தங்களது குடும்பத்தில் உள்ள குழந்தைகளை சி பி எஸ் இ பள்ளிகளில் இருந்து விலக்கிவிட்டு சமச்சீர் பள்ளிகளில் சேர்த்து விட்டு அதன் பின்பு இருமொழிக் கொள்கை பற்றி பேச வேண்டும் என்றும் கூறினார்.
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமமூர்த்தி