வாணியம்பாடி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் உள்ள 5 கடைகளின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் கொள்ளை
வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த தற்காலிகமாக புதிய பேருந்து நிலையம் ,இஸ்லாமியக் கல்லூரி மைதானம், பெரிய பேட்டை, ஜெயின் கல்லூரி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக காய்கறி சந்தையை மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது இந்த நிலையில் சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் புதூர் பகுதியில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் உள்ள 5 கடைகளின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான காய்கறிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் கடந்த ஒரு வாரமாக ரூ.3 இலட்சத்திற்கு மேலான காய்கறிகள் கொள்ளை போனதாகவும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
வாணியம்பாடி செய்தியாளர் சுஜாதா