கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி காசிபாளையம் மற்றும் அரசூா் பகுதிகளில் உள்ள 529 பெண்களுக்கு தலா 25 அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகளையும் தலா ரூ.2075 ரொக்கத்தையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் கால்நடைத்துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கருப்பணன் ஆகியோா் வழங்கினா்.
பின்னர் காலநடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது
ஆண்டு தோறும் தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் மகளிர்க்கு நாட்டு கோழியும்
1.5 லட்சம் மகளிர்க்கு 6 லட்சம் வெள்ளாடுகளும்..12 ஆயிரம் கறவை பசுக்களும் வழங்கபட்டுவருகிறது. இது இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது
ஒரே ஆண்டில் மூன்று கால்நடை மருத்துவ கல்லூரிகளை துவக்கியுள்ளோம்.
தலைவாசலில் அமைக்கப்பட்டு வரும் கால்நடைப்பூங்காவின் 70 சதவிகித கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளது இன்னும் இரண்டு மாதத்தில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பின் வகுப்புகள் துவங்கப்படும்
தேனி மாவட்டம் வீரபாண்டியிலும்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலும் புதிதாக கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த கல்லூரியும் துவக்கப்பட உள்ளது.
அரசு கேபிள் டிவி சந்தாதாரர்கள் ஆன்லைன் மூலமும் கேபிள் கட்டனத்தை செலுத்தலாம் என்று தெரிவித்தார்.