திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிளைச் சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறை காவலர் உட்பட 25 சிறைக்கைதிகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது.
இதனால் 5 கைதிகள் ஜாமினில் வெளியே சென்றுள்ள நிலையில் 20 கைதிகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கிளைச் சிறையில் இருந்த 10 கைதிகளை இன்று வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கிளைச் சிறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து இரண்டு நாட்கள் மூடப்படுகிறது.
பின்னர் இனிவரும் காலங்களில் கைதிகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்த பின்னரே அனுமதிக்கப்படும் என்று சிறை காவலர்கள் தெரிவித்தனர்.