தொழிலாளர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் கொரொனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்ற மாநகராட்சியின் அறிக்கையை திரும்பபெற தொழில்துறையினர் வலியுறுத்தல்
கோவை மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிபவர்கள் உடனடியாக கொரொனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல் உதவி ஆணையர் அனுப்பியுள்ள அறிக்கையை கண்டு அதிர்ந்து போயுள்ளனர் தொழில் துறைதியினர். மேலும் அறிக்கையில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் தீடீர் ஆய்வின் போது தொழிலாளர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்ததற்கான சான்று இல்லை என்றால் உடனடியாக பூட்டி சீல் வைக்கப்படும் எனவும், 10 நாளைக்கு ஒரு முறை கட்டாயம் கொரொனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என உதவி ஆணையர் தெரிவித்திருந்தார்.
இக்கடிதம் குறித்து தொழில் துறையினர் மாதம் 9 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மூன்று முறை கொரொனா பரிசோதனை செய்துகொண்டால், மிச்சம் ஒன்றும் இருக்காது எனவும், தற்போதுள்ள உற்பத்தி, சம்பளம் கொடுப்பதற்கே சரியாக இருப்பதாக தெரிவித்தனர். தற்போதுள்ள சூழலில் 30% மட்டுமே சிறு குறு நடுத்தர தொழில்கள் கஷ்டப்பட்டு இயங்கி வருவதாக தெரிவித்தனர்.
மேலும் ஒரு தொழிலாளிக்கு கொரொனா பரிசோதனை செய்துகொள்ள மாதம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை செல்வாகும் என்பதை மாநகராட்சி உணர்ந்து இந்த அறிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தினர். மேலும் தொழிலாளர்களுக்கு , அரசே இலவசமாக, கொரொனா பரிசோதனை செய்துகொடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பேட்டி ; பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள்
கோவை செய்தியாளர் பிரசன்னா