கோபிசெட்டிபாளையம ; அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்கு
தண்ணீர் குடிக்க வரும் யானைகளை போதை ஆசாமிகள் தொந்தரவு செய்து
விரட்டுவதால் வன விலங்குகள் அவதிக்குள்ளாகியுள்ளது.
பொதுமுடக்கம்
அமுலில் உள்ள நிலையில் தினசரி மாலை நேரங்களில் குண்டேரிப்பள்ளம் அணைக்கு
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் கூட்டத்தை
கட்டுப்படுத்தவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் ; கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வினோபாநகரின் அடர்ந்த
வனப்பகுதியில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது.
வனப்பகுதியில் உணவுக்காக வரும் யாணை, மான் ,காட்டெறுமை , பன்றி சிறுத்தை கரடி ஆகிய வனவிலங்குகள் மாலை நேரங்களில்
குண்டேரிப்பள்ளம் அணையின்
வடக்கு பகுதியில் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம்
தற்போது மீன்வளத்துறையினால் அனைப்பகுதியில் மீன் பிடிக்க வரும் மீனவர்கள் வனப்பகுதியில் பரிசல் இயக்குவதும் வலை
விரிப்பமாக இருப்பதால் தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகள் பயந்து
தண்ணீர் அருந்த வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மாலை நான்கு மணிக்கு மேல் வனப்பகுதியை ஒட்டியுள்ள கரைப்பகுதியில் மீன் பிடிக்கவோ பரிசல் இயக்கவோ கால்நடைகள் மேய்க்கவோ யாரும் செல்லக்கூடாது என பொதுப்பணித்துறையினர் தடை விதித்தனர்.
அதனால் யானை காட்டெருமை
மான் உள்ளிட்ட வன விலங்குகள் எவ்வித தடையிமின்றி தண்ணீர் குடித்து
விளையாடி செல்கிறது.
இந்நிலையில் தற்போது குண்டேரிப்பள்ளம் அணையில்
தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளை பார்வையிட சுற்றுலா பயணிகள்
அதிகளவு குவிந்து வருகின்றனர்.
இதனால் வன விலங்குகளுக்கு தொந்தரவு
ஏற்படுவதுடன் அதனுடைய தனித்தன்மையும் பாதிக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாது மது அருந்தும் சமூக விரோதிகள் அணையின்
உள்பகுதிக்குள் சென்று யானைகளை விரட்டுவதும் ஆபத்தை உணராமல்
யானையின் அருகில் சென்று செல்பி எடுப்பதுமாக யானைகளுக்கும் வன
விலங்குகளுக்கும் தொந்தரவு ஏற்படுத்தி் வருகின்றனர் .
பொதுமுடக்கம் அமுலில் உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மாலை நேரங்களில்
பங்களாபுதூர் காவல்துறையினர் ரோந்து சென்று மது குடிப்போர் உள்ளிட்ட
சமூக விரோதிகளை வெளியேற்ற வேண்டுமென விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.