ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள நசியனூர்- ஈரோடு ரோட்டில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நசியனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்து செல்கின்றனர். இக் கோவிலிலுள்ள உண்டியலை நேற்று இரவு இளைஞர்கள் உடைக்க முயற்சி செய்துள்ளனர். சத்தம் கட்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட 3 பேரும் பைக்கில் தப்பிச்செல்ல முயற்சி செய்து உள்ளனர். துரத்திச் சென்ற பொதுமக்கள் அவர்களை பிடித்து சித்தோடு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் ஈரோடு, சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு, ராமமூர்த்தி வீதி வீதியில் வசிக்கும் பழனியப்பன் மகன் ராஜகோபால் அதே பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மகன் கார்த்திகேயன், சூரம்பட்டிவலசு, இந்திரா வீதி, கனகராஜ் மகன் சந்திரசேகர் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நசியனூர் கருப்பராயன் கோவில் உண்டியலை உடைக்க முயற்சி செய்த குற்றத்திற்காக மூன்று பேரையும் சித்தோடு போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைத்தனர்.
பவானி செய்தியாளர்
ஜி. கண்ணன்