தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது குறித்து விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்னாள் இயக்குனர் தேவிகா ராணி உள்பட 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் ரூ.9 கோடி மதிப்புள்ள மருந்துகளை தேவிகா ராணி மற்றும் மருந்தாளர் நாகலட்சுமி ஆகியோர் போலி ரசீதுகள் தயார் செய்து மருந்துகள் வாங்காமலேயே வாங்கியது போன்ற கணக்கில் காண்பித்தது தெரியவந்தது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் 6 வீடுகள் வாங்க தனியார் ரியல் எஸ்டேட்டில் பினாமி பெயரில் முதலீடு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தேவிகாராணி வீட்டிலிருந்து ரூ.3 கோடியே 75 லட்சத்து 30 ஆயிரத்தையும், நாகலட்சுமி வீட்டில் ரூ.72 லட்சத்தையும் என மொத்தம் ரூ.4.47 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஊழல் முறைகேட்டில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திரா செய்தியாளர் ஈஸ்வர்