
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முன்பனிக்காலத்தை வரவேற்கும் விதமாகவும், சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்பார்த்தும் கொடைக்கானல் வத்தலகுண்டு மற்றும் பழனி பிரதான சாலைகளின் ஓரங்களில் மஞ்சள் நிற மலர்கள் (பெல்டோ போரம் டூபியம்) பூக்கள் கொத்து கொத்தாக பூத்து குலுங்குகின்றன,மேலும் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் மஞ்சள் நிற பூக்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பூத்து காட்சியளிக்கிறது,இந்த பூக்களை வாகன ஓட்டுனர்கள் கண்டு ரசித்து பயணிக்கின்றனர்