காட்டுமன்னார்கோயில் குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு – மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி கிராமத்தில் கனகராஜ் காந்திமதி தம்பதியருக்கு சொந்தமான பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை 10.45 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் காந்திமதி உட்பட 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் முதல்கட்டமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்களில் விபரம்:
- காந்திமதி
- மலர்கொடி
- சித்ரா
- லதா
- ராசாத்தி
- ருக்குமணி
- தேன்மொழி
- அனிதா
- ரத்தினம்பால்
கடலூர் மாவட்ட செய்தியாளர் N.ராஜ்குமார்