கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதி சித்ரா நகரை சேர்ந்தவர் துரைசாமி சம்பவ தினத்திற்கு முன் குடும்பத்துடன் உறவினர்கள் வீட்டு இல்லத் திருமணத்திற்கு சென்றுள்ளார். திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்க்கும் பொழுது பீரோவும் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை மற்றும் 30 லட்சம் பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் துரைசாமி புகார் அளித்ததை தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்களை கொண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆளில்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் ஆகியவை திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செய்தியாளர் பிரசன்னா