திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய மலை பகுதியாக இருந்து வருகிறது.. தற்போது கொடைக்கானல் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து மண் சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.. இதனை தொடர்ந்து நாயுடுபுரம் பகுதியில் தியனைப்பு துறை நிலையம் அமைந்துள்ளது..
இங்கு தியணைப்பு துறை இயக்குனர் சைலேந்திர பாபு திடிர் ஆய்வு மேற்கொண்டார்.. இதில் தியணைப்பு வாகனம் , பேரிடருக்கு பாதுகாப்பிற்கு பயன்படும் கருவிகளை ஆய்வு மேற்கொண்டார் ..இதனை தொடர்ந்து மலை பகுதிக்கு இலகு ரக மீட்பு வாகனம் வாங்குவது குறித்தும் கூடுதலாக தியணைப்பு நிலையம் அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.. மேலும் தியணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தார்.. தொடர்ந்து கொடைக்கானல் மலை பகுதிகளில் பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்..
கொடைக்கானல் செய்தியாளர் அருண்