கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து உள்ள அனைவருக்கும் இலவச ரேஷன் வழங்க வேண்டும், அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதத்திற்கு 7,500 ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும், கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், நாளொன்றுக்கு 600 ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும், அத்தியாவசிய பொருட்கள், பண்ணை வர்த்தகம், மின்சார சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், புதிய கல்விக் கொள்கை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி