தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஊரடங்கு தளர்வு பின்பு கோவில்கள் திறக்கலாம் என்ற அறிவிப்பு பின்னர் பக்தர்கள் சங்கரன்கோவில் வர ஆரம்பித்து உள்ளனர்…தற்போது கோவில் வாசலில் சிமெண்ட் கல் சாலை அமைப்பதற்காக சிமெண்ட் சல்லி கற்கள் கோவில் முன்பு வைக்க பட்டு வேலை நடைபெறாமல் உள்ளது.. இதன் அருகே சுற்று வட்டார பகுதியில் இருந்து சாமி தரிசனம செய்ய வருபவர்கள் 100 மேற்பட்ட இருசக்கர வாகனங்களை கோவில் முன்பாகவே நிறுத்தி விட்டு செல்கின்றனர்
மேலும் ஒரு சிலர் கார் ஆட்டோகளை அங்கேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர்…இதனால் நடைபாதை வழியாக செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாகின்றனர்… காவல் துறையினர் அறிவிப்பு பலகை வைத்தும் அதனை வாகன ஓட்டிகள் கண்டு கொள்ளவில்லை காவல் துறையினரால் 1 லட்சம் ரூபாய் சார்பில் அமைக்கபட்டு உள்ள சோதனை சாவடி திறக்கபட்டு இருப்பதும் காவலர்கள் பணியில் இல்லாமல் இருப்பதும் இப்பிரச்சினைக்கு காரணம் என கூறப்பபடுகிறது எனவே உடனடியாக கோவில் நிர்வாகம் நகர காவல் துறையினர் தலையிட்டு பக்தர்கள் எந்தவித பிரச்சனையும் இன்றி சாமி தரிசனம் செய்து வர ஏற்பாடு செய்யவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
சங்கரன்கோவில் செய்தியாளர் சி.முருகேசன்