
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள ஒரு பேக்கரியில் இன்று(நவ.25) கேக் மற்றும் பப்ஸ் வாங்கி சாப்பிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஃபுட் பாய்சன் ஆகி உடல்நலம் பாதிக்கப்பட்டு அத்திமூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து சுகாதாரத்துறையினரும் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.