கோக்கு மாக்கு

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் மொத்த நோய் தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்கள் விபரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,633. இதுவரை 70,626 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து13,812 என்றும், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 31,80,866 என்றும் அறிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது 8,62,320 பேர் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1.065 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button