பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் அல்ல” என பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பரவி அச்சுருத்தி வரும் கொரோனோ தொற்று நோய் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி பயில ஆசிரியர்கள் பள்ளிகளிள் இருந்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர். செல்போன் இணைய வசதிகள் போன்றவற்றிற்கு போதிய பணம் இல்லாததால் இது கிராம புற மாணவர்களை வெகுவாக பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் எந்த காரணம் கொண்டும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாணவர்களை
வற்புறுத்தக்கூடாது.
ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு அல்லது மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது என பள்ளிக்கல்வி ஆணையர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் எனவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.