ரயில்வே வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 7 ஆம் தேதி முதல் 7 சிறப்பு இரயில்கள் இயக்கம், சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு தொடங்கியது, சமூக இடைவெளியுடன் முன்பதிவு பயண சீட்டு வழங்கப்பட்டது,
சென்னையிலிருந்து திருச்சி, காரைக்குடி, மேட்டுப்பாளையம், கோயமுத்தூர், கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு 7 சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளன, ரயில்கள் முழுவதும் முன் பதிவு செய்யப்பட்டு பயணிகள் ரயில்களாக இயக்கப்படும், ரயில்களில் குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், உணவு வினியோக பெட்டி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும், மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதலின்படி கொரோனா தொற்றுநோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், பயணிகள் ரயில் நிலையத்திற்குள் நுழையும் முன்பு உடல் வெப்ப பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.