இந்த மரங்கள் மழைக்காலங்களிலும்,இயற்கை பேரிடர் காலங்களிலும் அவ்வப்போது சாய்ந்து விழுந்து விடுவது வழக்கம். இதனை அறிந்த வனத்துறையினர் மரத்தினை அடையாளம் காணும் வகையில் எண்களை எழுதி வைத்து செல்கின்றனர்.பின்னர் இந்த மரங்களை வெட்டி வனத்துறை தேக்குமர கிடங்கில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இப்பகுதியில் விழுந்து கிடக்கும் மரங்கள் பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள சிரமப்படுவதாகவும்.
மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்கள் மண்ணில் புதைந்தும் கரையான் அரித்தும் மண்ணோடு மண்ணாக புதைந்து வருகிறது.எனவே மழைக்காலம் தொடங்கும் முன்னரே அனைத்து தேக்கு மரங்களையும் அப்புறப்படுத்த அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செய்தியாளர் K.ராஜசேகர்.