கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் ரூ.2.70 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் 7,792 விவசாயிகள் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் 2.70 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 5,976 விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், 1,816 விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி செய்தியாளர் ரிஸ்வான் பாட்சா