திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா தெருதெருவாக சென்று பட்டாணி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் மாற்றுத்திறனாளியான தமிழ் செல்வன் இவருக்கு ஒரு கால் இழந்து செயற்கை கால் பொருத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் இவரது பாட்டி இறந்து விடவே ஆலங்காயம் சாலையில் உள்ள ஊசி தோப்பு பகுதியில் கல்குவாரி அருகே திதி கொடுப்பதற்காக சென்ற இடத்தில் கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த மழை நீரில் குளிப்பதற்காக மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன் தனது செயற்கை காலை கரையில் கழற்றி வைத்துவிட்டு தண்ணீரில் இறங்கி குளித்த போது ஆழமான பகுதியில் சிக்கி தமிழ்செல்வன் சத்தம்மிடவே அவரது தந்தை அவசர அவசரமாக உதவிக்கு சென்று உதவும் முயலும் முன் மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கியுள்ளார்.
பதறிப்போன அவரது தந்தை ராஜா உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய மாற்றுத்திறனாளி தமிழ்ச்செல்வன் உடலை தேடி வருகின்றனர். நேற்று இரவு நேரம் நெருங்கி விட்டதால் தேடும் பணியை கைவிட்டு மீண்டும் இன்று காலை சடலத்தை தேடும் பணியை தீயணைப்பு துறையினர் துவங்கியுள்ளனர். தந்தை கண் முன்னே மாற்றுத்திறனாளி மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.