கோக்கு மாக்கு

விரைவு பஸ் கோவையில் இயங்கத் துவங்கியது

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து வருகிற 7-ந் தேதி முதல் மாவட்டங்கள் இடையே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

சாலை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தால் மட்டுமே ஆம்னி பஸ்களை இயக்க தயாராக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் அரசு பஸ்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. முதல்-அமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து வெளியூர் செல்லும் பஸ்களில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. பஸ்களின் உள்ளேயும், வெளியேயும் கிருமிநாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்தது.

தமிழகத்தில் 1,184 அரசு விரைவு பஸ்கள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 524 அரசு விரைவு பஸ்கள் வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்பட இருக்கின்றன. இந்த விரைவு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, 6-ம்தேதி இன்று நள்ளிரவு முதல்நீண்ட தூரம் செல்ல வேண்டிய தொலைதூர அரசு விரைவு, சொகுசு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராகி வருகின்றன.

அதன்படி, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
இதன் ஒரு பகுதியாக கோவை மண்டலத்திலிருந்து பல்வேறு மாவடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்நிலையில், வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்க உள்ள ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுறிவுரைகளை வழங்கி உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button