ஈரோடு மாவட்டம், பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினசரி சேலம், நாமக்கல், கோவை, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் உட்பட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வந்தது. கொரானா கால ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் அனைத்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பேருந்துகள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பவானி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை முதல் கிராமங்களுக்கான பஸ்கள் மட்டுமே குறைந்த அளவு இயக்கப்பட்டு வருகிறது. வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால், வெளியூர் செல்ல இருந்த பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தனர். ஒரு பஸ்ஸில் 25 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் வசூல் குறைவாகவே வரும் என்பதாலும், தனியார் பேருந்துகள் இயங்காத காலகட்டத்தில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உட்பட பல காரணங்களால் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதாக பயணிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு பவானி
செய்தியாளர் ஜி. கண்ணன்