குடியாத்தம் அருகே அரசு விதியை மீறி பாலிடெக்னிக் கல்லூரியை திறந்ததோடு, மாணவர்களை வரவழைத்த நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப. அறிவிப்பு.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வேப்பூர் கிராமத்தில் குருராகவேந்திரா பாலிடெக்னிக் என்ற தனியார் கல்லூரி உள்ளது.
இந்நிலையில், பாலிடெக்னிக் மாணவர்கள் அனைவரும் சீருடையுடன் கல்லூரிக்கு வரவேண்டுமென நிர்வாகம் நிர்பந்தித்துள்ளது. தற்போது அனைத்து பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்க துவங்கியிருப்பதால் பாலிடெக்னிக் நிர்வாகம் மாணவர்களுக்கு இவ்வாறு கெடுபிடி கொடுத்துள்ளனர்.
தமிழக அரசின் கொரோனா விதிகளை மதிக்காமல் இந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி வரவழைத்துள்ளது. இந்நிலையில் மாணவ,மாணவிகள் முகக்கவசம் அணியாமலும் கல்லூரிக்கு சென்றனர்.
எனவே, கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது இதனால் இந்த கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோருகின்றனர்
இது குறித்து ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில் விதியை மீறி கல்லூரிகள் திறக்க கூடாது அவ்வாறு திறக்கப்பட்டால் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படுவது பொதுமக்கள் வியாபாரிகள் பாதிக்க கூடாது என்பதற்காக தான்.
ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பள்ளி கல்லூரிகளை திறப்பது சரியில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.