
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் ஜெயராமன் என்ற விவசாயி தனது வாழை தோட்டத்தில் அவரின் பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவிழ்ந்து விட்டு விட்டு தோட்ட வேலையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகில் பசு மாடு மேய்ந்துகொண்டிருந்த போது கால் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளது.
சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்த ஜெயராமன் அதிர்ச்சியடைந்து சத்தம் போடவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து கிணற்றிலிருந்து பசுமாவட்ட மீட்க முயற்சி மேற்கொண்டு பலனளிக்காமல் போகவே கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றினுள் இறங்கி கயிறு மூலம் எட்டு மாத கர்ப்பிணி பசு மாட்;டை மீட்கும் முயற்ச்சியில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக ஈடுபட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் உதவியுடன் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
கிண்றில் இரண்டடி தண்ணீர் இருந்ததால் பசு மாடு சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது.
கர்ப்பிணி பசு மாட்டை காயமின்றி மீட்ட கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
60 அடி ஆழமுள்ள கிணற்றில் எட்டுமாத கர்ப்பிணி பசு மாடு தவறிவிழுந்த சம்பவத்தினால் அப்பகுதியில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது