ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கேசரிமங்கலம், குறிச்சி, மாணிக்கம்பாளையம், காடப்பநல்லூர், சிங்கம்பேட்டை, படவல்கால்வாய் பூதப்பாண்டி போன்ற ஏழு கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 11067 குடிநீர் இணைப்பு வழங்க ஜல் ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ. 12.81 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கி வைத்தார். அப்போது செல்லும் இடங்களெல்லாம் பொதுமக்கள் குறைகளை மக்களாக கொடுத்ததை தொடர்ந்து தகுதியுடைய மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் களான சக்திவேல் சரவணன் மற்றும் அம்மாபேட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் சரவணபவா மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு பவானி
செய்தியாளர் ஜி. கண்ணன்