கோக்கு மாக்கு

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகளை கைவிட்ட தந்தை மகளை காப்பாற்ற தாயின் பாச போராட்டம்

சேலத்தில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வரும் விஜயகுமார் என்பவரின் மனைவி ராஜநந்தினி. இவர் தனது 13 வயது மகள் ஜனனியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு மருத்துவ உதவி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது மகளுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் சேலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தனது மகளை கோவைக்கு அழைத்து வந்து தனது சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

சிகிச்சைக்கு பல லட்ச ரூபாய் செலவான நிலையில் கல்லீரல் பிரச்சனைக்கு பதிலாக சிறுநீரக பிரச்சனை இருப்பதாக கூறி தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

மாற்றப்பட்ட சிறுநீரகத்தை காக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் , இதனையடுத்து தனது கணவர் உட்பட உறவினர்களிடம் கல்லீரல் தானம் தந்து உதவும்படி கேட்டதாகவும் அதற்கு கணவர் உட்பட உறவினர்கள் உதவ முன்வரவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். ஆரம்பத்தில் மகளின் சிகிச்சைக்கு உதவிய கணவர் விஜயகுமார் தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ மறுப்பதாகவும் மகளின் மேல் சிகிச்சையை சிகிச்சையைத் தொடர முடியாமல் அவதிபடுவதாக தெரிவித்தார். கடந்த ஓராண்டாக கோவையில் தனியார் மருத்துவமனை விடுதி ஒன்றில் தங்கி மகளுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் தனது மகளின்
உயிரை காப்பாற்ற தான் போராடி வருவதாகவும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப் பட்ட தனது மகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button