கோவை அன்னூர் வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் குமார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவரது மகள் ராகினி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அன்னூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில், அலைபேசியில் இவர் அதிக நேரத்தை செலவழித்ததால் மாணவியின் தந்தை அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், விரத்தியடைந்த பள்ளி மாணவி நேற்று மாலை சானி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
வீட்டில், மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை கண்ட அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில்,சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அலைபேசியை பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்டித்ததால், மனமுடைந்து மாணவி சானி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.