மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
புதுக்கோட்டையில் இன்று நத்தம்பண்ணை முதல்நிலை ஊராட்சி பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு நத்தம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமை தாங்கினார் விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரணப் பொருள் அடங்கிய பைகளை வழங்கினார்
இன்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இந்த கொரோனா நிவாரணப் பொருட்களை அமைச்சர் வழங்கினார் விழாவில் பேசிய அமைச்சர்
எந்த ஒரு பேரிடர் காலமாக இருந்தாலும் மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்வது அம்மாவின் அரசு தான் என்றும், எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்களை கண்டு கொள்ளவில்லை என்றும் அம்மாவின் ஆசியுடன் நடைபெறும் இந்த அரசுதான் கஜா புயல் காலமாக இருக்கட்டும், தற்பொழுது கொரோனா நோய்தொற்று காலமாக இருந்தாலும் களத்தில் நேரடியாக பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரே ஆட்சி நமது அண்ணா திமுக தலைமையிலான தமிழக அரசுதான்.
இந்தியாவிலேயே இந்த கொரோனா நோய்தொற்று காலத்தில் எந்த ஒரு மாநில முதல்வரும் மக்களை சந்திப்பது இல்லை. அது பொது மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இந்தியாவிலேயே இந்த கொரோனா நோய்தொற்று காலத்தில் சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி அரசின் நலத் திட்டங்களையும் நிவாரணங்களை வழங்கி வரும் ஒரே முதலமைச்சர் நமது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் இதை மக்கள் நன்கு உணர்ந்து வரும் காலத்தில் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார் விழாவில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்