கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் கூடுதல் பள்ளிக்கட்டிடம் மற்றும் ஆய்வகத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் அடிக்கல்நாட்டி பூமிபூஜையுடன் கட்டிடப்பணிகளை தொடங்கிவைத்தனர்
பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில்….
நீட் தேர்வில் இருந்து தமிழகதிதிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்து கடந்த முறை கொரோனா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்த போது வலியுறுத்தினார்.
நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இன்று நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 7417பேர்
தேர்வு எழுத உள்ளவர்கள் 3942பேர் இதனால் முழுமையாக பங்கேற்றவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த பட்டியல் நாளை தெரிய வரும்
நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் தடுக்க அரசின் சார்பில் தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்
நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பும் போது முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பதில் அளிப்பார் என்று தெரிவித்தார்.