ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் குட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் செம்பன் வரவேற்றார். மாவட்ட நிதிச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட துணைச் செயலாளர் கனல் கதிர், அந்தியூர் தொகுதி செயலாளர் பழனிவேல், பவானி தொகுதி செயலாளர் தமிழ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேங்கை பொன்னுச்சாமி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில், நீட் தேர்வால் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒத்துழைப்போடு நீட் தேர்வை ரத்து செய்ய அரசாணை வெளியிட வேண்டும், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரிக்க வேண்டும், நாளை மாநில செயற்குழு கூட்டத்திற்கு ஈரோடு வருகை தரும் கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவனுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, செப்டம்பர் 17ஆம் தேதி பெரியாரின் 142 வது பிறந்த நாளை கொடியேற்றத்துடன் கொண்டாடுவது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலையை நிறுவ வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அந்தியூர் ஒன்றிய துணைச் செயலாளர் குமார், சுந்தரமூர்த்தி, ராமசாமி, பாரதிராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.