பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தலைமை வகித்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் வரவேற்று பேசினார். இதில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி. கருப்பணன் ஆகிய இருவரும் இணைந்து பவானி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பாசறை டிவி முகநூல் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தனர். பின்னர் செங்கோட்டையன் பேசுகையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. நல்லவரின் ஆட்சியில் நல்ல மழை பொழிகிறது. இதற்குச் சான்றாக 303 நாட்கள் மேட்டூர் அணை தொடர்ந்து 100 அடி தண்ணீர் உள்ளது. அதே போல் பவானிசாகர் அணை 70 அடி குறையாமல் மக்களுக்கு தண்ணீர் வருகிறது. ஒருவர் இரவில் கனவு கண்டு வருகிறார். நாம்தான் முதல்வர் என அந்தக் கனவு எப்பொழுதும் பலிக்காத வகையில் பகல் கனவாக மாற இங்கு கூடிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை அமைப்பினர் அரும்பாடு பட வேண்டும். வருகின்ற தேர்தலில் நம் கட்சி வெற்றி பெற. முதல்வரும் துணை முதல்வரும் அம்மாவின் வழியில் பல நல்ல திட்டங்களைத் தீட்டி நல்லாட்சி நடத்தி வருகின்றனர்.
இதனை பவானி சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே கொண்டு செல்ல வேண்டும் என பேசினார்.
கருப்பண்ணன் பேசுகையில் கட்சியில் பெரிய பதவிக்கு வர இரவு- பகல் பாராது உழைக்க வேண்டும். பொறுமை மிகவும் முக்கியமானது. நமக்கு என்ன கிடைக்குமோ அது கிடைக்கும். நான் சின்ன பதவியை வகித்தே இன்று இந்த அளவிற்கு உயர்ந்து உள்ளேன் என இளைஞர்களிடையே விளக்கி பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பவானி ஒன்றிய செயலாளர் தங்கவேல், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சரவணபவா மற்றும் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழில்நுட்பப் பிரிவு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் சார்பு அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு பவானி
செய்தியாளர்
ஜி. கண்ணன்