புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழை வாயில் முன்பு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு புதுக்கோட்டையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக இழுத்து மூடக் கோரி டெல்லிக்கு புறா மூலம் தூது விடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தியதற்கு மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பது மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூர் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் டெல்லிக்கு புறா மூலம் தூது அனுப்பும் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.