
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் கிராமம் அருகே சாலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்த மூக்கையா மகன் (விக்னேஷ்சுவரன் 21) கொத்தையா மகன் (சந்திரபிரகாஷ் 19) ராஜா (19) ராமசாமி(20) சந்திரபிரகாஷ் விக்னேசுவரன் ஆகிய இருவரும் பொறியியல் கல்லூரிகள் பயின்று வருகின்றனர்.ராஜா, ராமசாமி இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.. இவர்கள் 4 பேரும் கடந்த 6 ம் தேதி செங்கோட்டை குண்டாறில் குளித்து விட்டு ஊர் இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தனர்.. அவர்கள் உள்ளார் அருகே தளவாய் புரம் அருகே சென்ற போது தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையோரத்தில் பேசிக்கொண்டு இருந்தனர்.. அப்போது அவ்வழியாக சென்ற சரவணக்குமார் அவரது அண்ணன் சீனிச்சாமி அவர்கள இடம் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டபோது இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் முற்றியது மேலும் அங்கு சாலையில் கிடந்த கற்களை கொண்டு சரவணக்குமாரை தாக்கினர்.. இதில் காயம் அடைந்த சரவணக்குமார் சிவகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை காக திருநெல்வேலி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கபட்டர் …அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணக்குமார சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்… இதனையடுத்து நான்கு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து சிவகிரி மேஸ்திரேட் முன் ஆஜர் படுத்தி 4பேரையும் சங்கரன்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்..