புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு அணி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ராஜகோபாலபுரம் பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் சுமார் 100 பேருக்கு இலவசமாக நோட்டு புத்தகம் பென்சில் கலர் ஸ்கெட்ச் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினர்
இந்த நிகழ்வில் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் சீனிவாசன் மாவட்ட செயலாளர் சுப்பையா தொழில் பிரிவு மாவட்ட துணைத்தலைவர்கள் காசி செல்வம், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் இந்த நிகழ்வில் குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இலவசமாக வழங்கிய பின் குழந்தைகள் அனைவரும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி கட்டாயமாக அரசு பள்ளிகள் நாங்களும் ஹிந்தி கற்றுக் கொள்வோம் என அனைத்து குழந்தைகளும் ஒன்று சேர்ந்து உறுதி மொழி ஏற்றனர்