புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் உதவித் தொகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நகராட்சி பேரூராட்சி ஊராட்சி களில் வேலை செய்யும் ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு நகராட்சி பேரூராட்சி ஊராட்சி களில் பணிபுரியும் தினக்கூலி ஒப்பந்த சுய உதவிக் குழு தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
குறைந்தபட்ச ஊதியம் அரசாணையை படி 600 வழங்க வேண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி இறந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு 50 லட்சம் வழங்கி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் துப்புரவு பணியாளர் தூய்மை காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதுடன் அனைவரையும் காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும் பல ஊராட்சிகளில் இரண்டு மாதம் முதல் 6 மாதம் வரை சம்பள பாக்கி உள்ளது உடனடியாக சம்பள பாக்கியை வழங்குவதுடன் மாதம் மாதம் 5 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு