கோக்கு மாக்கு

பெண் அரசு மருத்துவருக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி..

*பாலியல் இச்சைக்கு இணங்காதால் பழிவாங்கப் படுவதாக அரசு பெண் மருத்துவர் பகீர் புகார்.*

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் மருத்துவர் மருத்துவத் துறை உயர் அதிகாரியின் பாலியல் இச்சைக்கு இணங்காததால் தற்போதும் அந்த மருத்துவத் துறை உயர் அதிகாரிகளின் தூண்டுதலின்பேரில் தொடர்ந்து பழி வாங்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

இதன் விபரம் பின்வருமாறு. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது இங்கு டாக்டர் பெமிலா என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார் இவர் பணகுடியில் பணிபுரிந்து வந்த போது மருத்துவ உயர் அதிகாரியான சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோலப்பன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அதனால் புகார் அளித்ததாகவும் அதனால் உள்ளூர் ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கொலை செய்ய முயற்சித்ததாக இதுகுறித்து பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சுகாதார பணிகள் துணை இயக்குனரின் தலையீட்டின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டதாகவும் அதன்பின்னர் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் குமரி மாவட்டத்திற்கு தான் பணியிட மாற்றம் பெற்று வந்ததாகவும் அதன் பின்னர் மேற்படி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்டாக்டர் கோலப்பனின் தூண்டுதலின்பேரில் சுகாதாரப்பணிகள்துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜ் மூலம் தொடர்ந்து தனக்கு பணியில் தொந்தரவு தருவதாகவும் பொய்யான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்பதாகவும் அதுதொடர்பான ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க பெண் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்ற நிலையில் அதற்கு மாறாக மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகளான ஆண் அதிகாரிகளே விசாரித்து வருவதாகவும் விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் பெண் அதிகாரிகளின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மேற்படி மருத்துவர் பெமிலா குறிப்பிட்டு மீண்டும் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜ் தன்னை தனியாக வந்து நேரில் சந்திக்குமாறும் அப்போதுதான் உதவுவதாக பேசும் ஆடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே மேற்படி துணை சுகாதார பணிகள் இயக்குனர் போஸ்கோ ராஜா துறை ரீதியான நடவடிக்கையில் தண்டிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் பணியிட மாற்றம் பெற்று குமரி மாவட்டம் வந்த பின்னர் தனக்கு கீழ் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பல்வேறு விதங்களில் தொந்தரவு கொடுத்து அவர்களுக்கு மெம்மோ வழங்கி அதன்பின்னர் லஞ்சம் வாங்கி விட்டு சரி செய்து கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே பெயர் குறிப்பிட விரும்பாத செவிலியர் ஒருவருக்கும் பணிஇடைநீக்கம் செய்து பின்னர் லஞ்சம் பெற்று அவரை பணியில் சேர்த்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அரசு பெண் மருத்துவர் கூறும் பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க பெண் அலுவலர்கள் தலைமையில் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நேரிட்டால் அது தொடர்பாக விசாரணை நடத்த பெண் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் துறைவாரியாக பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் கொடுமைகள் குறித்து புகார் தெரிவிக்க குழு அமைக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் இருக்க அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மேற்படி அரசு பெண் மருத்துவர் புகாரை விசாரிக்க நேர்மையான பெண் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் அந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் மேற்படி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கோரிக்கை விடுத்து இருப்பது நியாயம் என்று பொதுமக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதிகாரிகள் மேல் புகார் அனுப்பிய மேற்படி பெண் மருத்துவர் மீது அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து அவரைப் பழிவாங்க போலி புகார்கள் பெற்று பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மேற்படி அரசு பெண் மருத்துவர் கண்ணீர் மல்க மீண்டும் மீண்டும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளார். மேலும் அரசு பெண் மருத்துவர் புகாரில் இருந்து தப்பிக்க துணை சுகாதார பணிகள் இயக்குனர் போஸ்கோ ராஜா தனக்கு கீழ் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் செவிலியர்களிடம் தனக்கு எதிராக புகார் ஒன்றை தயார் செய்து அக்டோபர் 2 தேதியில் வீடு வீடாக சென்று கையொப்பம் பெற்று வருவதாகவும் அதற்கு ஆதாரமாக பதிவு செய்துள்ள ஆடியோ மூலம் தெளிவாகியுள்ளது மேலும் முகாம் பணியாக வெளியிடங்களுக்கு பணிக்கு அனுப்பிவிட்டு சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடவில்லை என்று பொய்யாக குற்றம் சாட்டி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மருத்துவர் கண்ணீர் மல்க கூறினார். வெளியிடங்களுக்கு பணிக்கு அனுப்பினால் அங்கு சிறப்பு அதிகாரியாக செல்வதால் அங்கு அதன் வருகை விவரங்கள் பதிவாகி இருக்கும் என்று கூறுகிறார். மேலும் தான் பணிபுரியும் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மனையில் வருகை பதிவேட்டை எடுத்து ஒளித்து வைத்துள்ளதாகவும் அதில் கையொப்பமிட அனுமதிக்கவில்லை என்றும் உயர் அதிகாரி பல்வேறு குறிப்புகள் எழுதி தன் மீது குற்றச்சாட்டு புனைய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க மாவட்டம் விட்டு மாவட்டம் வந்த பின்னரும் பாலியல் தொந்தரவு கொடுத்த சுகாதார பணிகள் துணை இயக்குனர் குமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரை தொடர்புகொண்டு அவர் மூலம் மீண்டும் தனக்கு நெருக்கடிகள் தந்து அவர்கள் நினைத்ததை சாதிக்க முயற்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேற்படி குற்றச்சாட்டுகளின் படி நீதியான நடவடிக்கை எடுப்பது பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கூற்றாக உள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button