
தென்காசி மாவட்டம் நன்னகரம் பகுதியை சேர்ந்தவன் பிரபல கஞ்சா வியபாரியான ஆதிராஜ் இவன் இப்பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களை குறிவைத்து அவர்களுக்கு போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்து வந்தான் இவனை பிடிக்க குற்றாலம் போலீசார் தனிபடை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர் இதனையறிந்து கஞ்சா வியாபாரி ஆதிராஜ் தலைமறைவாக சுற்றி திரிந்தான் இந்நிலையில் நேற்று போலீசார் ரோந்நு பணியில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரை கண்டு ஓட முயன்றான் அப்போது அவனை விரட்டி பிடித்து அவன் பையில் வைத்திருந்த சுமார் ஒருகிலோ நூறு கிராம் எடையுள்ள கஞ்சா பார்சலையும் கைபற்றினர் ஆதிராஜ் கைது தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுனாசிங் மற்றும் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் ஆகியோர் குற்றால காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல் நிலைய காவலர்களையும் பாராட்டினார்.