
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெற் பயிர்கள் விவசாயிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமான ரகமான விதைகளை விதைத்து பயிர் செய்து இருந்தனர். இந்த காலத்தில் சம்பா பயிர் சாகுபடி காலம் ஆகும்.விவசாயிகள் பல ஏக்கர் கணக்கில் நெல் பயிர்களைப் பயிரிட்டு வளர்த்து வந்தனர். மேலும் இந்த ஆண்டு காலம் கடந்து பருவ மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மழை விவசாயிகளின் கண்ணில் மண்ணை தூவியது. இதனால் விவசாயிகள் பம்பு செட் மற்றும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் சாகுபடி செய்தனர். கடந்த மூன்று மாதங்கள் சாகுபடி செய்த பயிர்களை அறுவடை காலம் நெருங்கும் நேரத்தைப் பார்த்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு அதிக மகசூல் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.